மத்திய சென்னையை குறிவைக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

0

சென்னையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன.

இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை தோற்கடித்தார். 

இந்த முறை திமுக சார்பில் மீண்டும் தயாநிதிமாறனே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், அமமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவியும், கமல் கட்சி சார்பில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதியில் போட்டியிடும் எல்லோருமே மிகவும் பாப்புலரான வேட்பாளர்கள் என்பதால், தொகுதியில் இப்பவே தேர்தல் களை கட்டிவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.