மன்னார் மனித புதைகுழி பரிசோதனை அறிக்கை உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

0

மன்னார் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கை நேற்று சட்ட பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அறிக்கை நேற்றைய தினம் சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் என்னால் வழங்க முடியாது. அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனதெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.