மஹிந்த – ஜேவிபி சந்திப்பின் பின்னணி என்ன?

0

மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது எனவும், பேச்சுவார்த்தையில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

கூட்டு எதிரணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் மாலை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதனையடுத்து, மக்கள்விடுதலை முன்னணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சியிலுள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது தமது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளுக்கிணங்க அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தால் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராகவுள்ளேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் நெருங்குவதனால் கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி நேற்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடாத்திய விசேட பேச்சுவார்த்தை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.