முல்லை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பாரிய ஊழல் அம்பலம்! அரசியல் தலைகளுக்கும் தொடர்பு!!

0


முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதே செயலகத்தின் ஊடாக பொது அபிவிருத்திக்கு (கம்பரலிய) ஊர் எழுச்சி திட்டம் மூலம் அபிவிருத்திக்கு என வந்த நிதி நூதனமாக மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது கணக்காய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைத்தியர் சிவமோகன் பாராளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களோடு 5% அவர்களுக்கு வளங்குவது என்ற நிபந்தனையில் வழங்கப்பட்டு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

சிவமோகனது இனைப்பாளர் என கூறிக்கெள்ளும் ரூபன் என்பவரும் வைத்தியர் சிவமோகனது சகோதரரான அபிவிருத்தி உதவியாளர் தரத்தில் உள்ள சிவஜேந்தன் (அமைச்சர் றிசாட் மற்றும் சிவமோகனது செல்வாக்கால் தகுதி இன்றியும் தற்காலிகமாக உதவித்திட்டமிடல் உத்தியோகத்தர் என தனக்கு தானே பதவியை உருவாக்கியவர்) இருவரும் இனைந்து தனியாருடன் பேரம் பேசி 50 ஆயிரம் தொடங்கி ஒரு இலட்சம் வரை பணம் பெற்று ஒப்பந்தம் வளங்கியதும் இதன் மூலம் செய்யப்பட்ட வீதிகள் தரமற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதே போன்று அமைச்சர் றிசாட்டின் இனைப்பாளர் என தன்னை கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஊழலை எம்மால் சுட்டி காட்டியதை தொடர்ந்து குறித்த உத்தியோகத்தர் அரச பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் இதன் பின்னர் குறித்த ஜோசப் ஜோயீஸ்குமார் என்பவருக்கு உப ஒப்பந்தம் வழங்கி அவர் அதனை தரமற்ற முறையில் செய்துள்ளமை கணக்காய்வு பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவமோகனது சகோதரரான சிவஜேந்தன் மண் அனுமதிப்பத்திரம் வளங்கும் போது மணல் வியாபாரிகளுக்கே அனுமதிப்பத்திரம் வழங்குவதாகவும் இதற்கு ஒரு முறை வளங்குவதற்கு 2000 ரூபா வரை பணம் பெறுவதாகவும் இதனால் வீட்டுத்திட்ட பயனாளிகளான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதிய பிரதேச செயலாளர் நியமனத்தின் பின்னர் சிவமோகனது சகோதரரான சிவஜேந்தனுடைய ஊழல்களை இனங்கண்ட புதிய பிரதேச செயலாளர் சகல விடையங்களையும் சிவஜேந்தனிடம் இருந்து நீக்கி ஏனைய பிரிவுகளுக்கு மாத்தியதோடு இவர் மீது ஒழுக்காற்று நடைவடிக்கையை மேற்கெள்ள முயற்சித்தபோது  அமைச்சர் றிசாட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் முட்டுக்கட்டையக இருப்பதோடு புதிய பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய சதி முயற்சிகளை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு மேலதிகமாக கரைதுறைப்பற்றின் பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் சிவஜேந்தன் போட்டியிட உள்ளார். இதனால் ஒவ்வரு உறுப்பினர் வீடாக சென்று தனக்கு வாக்களிக்கும்படியும் தான் வீட்டுத்திட்டம் மற்றும் அரச உதவிகளுக்கு சிபாரிசு செய்வதாக மக்களிடம் வாக்கு சேகரிப்பதாக முறைப்பாட்டு கடிதம் பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்படியான மோசடி பேர்வழியிடம்  கரைதுறைப்பற்றின் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முக்கிய பதவிக்கு வந்து மக்கள் பணத்தை சூரையாடுவதை மக்கள் தடுக்க முன்வரவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.