முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் ஆள் இலக்க தகடுகள் மீட்பு!

0

முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்கத் தகடுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று (03) முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்கள் மேற்கொண்ட சிரமதான பனியின் போது குறித்த இலக்க தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் நடைபெற்ற ஆலய வளாகப் பகுதி ஒன்றிலேயே இவ்வாறான தகடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image result for புலிகளின் தகடுகள்

Leave A Reply

Your email address will not be published.