யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி!

0

யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

மருதனார் மடம் சந்தையில், மரக்கறிகளை வாங்கிக்கொண்டு குறித்த முதியவர் உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றினை அவர் முந்தி செல்ல முற்பட்டது.

இதன்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியுள்ளது.

குறித்த சம்பவத்தினால் படுகாயமடைந்த முதியவரையும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.