யுத்த காலத்தில் வெள்ளை வான் கலாசாரத்தில் நான் ஈடுபடவில்லை! கோட்டா

0

யுத்தக்காலத்தில் வெள்ளை வான் கலாசாரத்தில் நாம் ஈடுபடவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டபாய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு சில நுண்ணறிவு செயற்பாடுகளையே முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்ததொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லையென அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்றிருந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அனைத்து மக்களுக்கும் நிம்மதியான வாழ்க்கையை தற்போது ஏற்படுத்தி கொடுத்துள்ளாரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.