ரணிலுக்கு துரோகம் இழைத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்! உண்மையை உடைத்த மஹிந்த தரப்பு!

0

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோல்வியடையச் செய்யப்பட்ட இரு அமைச்சுக்களுக்கான வாக்கெடுப்பை நடாத்துமாறு துப்புத் தந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் சிலராகும் என மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்ற தேவை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பின்னாசன எம்.பி.க்களுக்கு இருந்தது. அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ளவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட அவர்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்தனர்.

இதன் நிமித்தமே நேற்றைய தினம் சபையில் அமைச்சர்கள் குறைவாக இருப்பதனால், வாக்கெடுப்பொன்றைக் கோருமாறு ஐ.தே.கட்சியின் தரப்பிலிருந்து தமக்கு செய்தி வந்ததாகவும் ரோஹித எம்.பி. சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடையச் செய்யப்பட்டன. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.