வரவு செலவு திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச விசனம்!

0

நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து கூறியுள்ளார்.

வரிச்சுமை கூடிய வரவு செலவு திட்டத்தையே இம்முறையும் அரசாங்கம் முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை முன்னெடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது.

மாறாக நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்தவே முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வரவு-செலவுத்திட்ட யோசனையை பிற்பகல் 2 .10 மணிக்கு வாசிப்பதற்கு ஆரம்பித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய உரையை மாலை 4.20க்கு நிறைவுக்கு நிறைவு செய்தார்.

அவரது உரை ஆரம்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சியின் அனைவரும் மேசைகளை தட்டி அவரது முன்மொழிவுகளை ஆதரித்தனர். எனினும் எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகள் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.