விஜயகாந்தைக் கவனித்தீர்களா? பலரை வேதனைக்குள்ளாக்கிய காட்சி!

0

இந்தியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் கூட்டணி உடன்படிக்கையொன்றினைச் செய்திருந்தது.

இந்த உடன்படிக்கையின்போது மனைவியுடன் கலந்துகொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் பிடித்துவைத்த பிள்ளையாரைப்போல் மிகவும் அமைதியாக அசாதாரண நிலையில் இருந்தமை அனைவரின் பார்வையினையும் திருப்பியுள்ளது.

இதனடிப்படையில் இந்த கூட்டணியின்போது விஜயகாந்த் உண்மையிலேயே சுய நினைவோடுதான் இருந்துள்ளாரா? அல்லது அவர் வேண்டுமென்றே இதில் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறாரா என்பதுகுறித்த கருத்துக்கள் இணையவெளியில் வலுத்துள்ளன.

அண்மையில் அவசர சிகிச்சைகளுக்காக அமெரிக்கா மருத்துவமனைக்கு சென்றுவந்ததன் பின்னர் விஜயகாந்தின் உடல் நிலை இன்னமும் சீரான நிலைக்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அவரால் பேசுவதற்குக்கூட முடியாத சூழ் நிலை காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது.

உடபடிக்கை கைச்சாத்திடலின்போது மனைவி பிறேமலதாவுக்கு அருகில் இருந்துகொண்டு மிகுந்த சிரமத்தை அனுபவித்தவாறே அவர் நடப்பதை அவதானிப்பது புரிகிறது. கூட்டத்தின் இறுதிப்பகுதியில் அவர் பிறேமலதா அமர்ந்திருந்த கதிரையின்மேல், பிறேமலதாவுக்கு பின் பிறமாக கையை போட்டுக்கொண்டிருக்கிறார். இதன்போது கையை எடுங்க என்று பிறேமலதா மிரட்டும் தொனியில் கூறியவுடன் விஜயகாந்த் உடனடியாக எடுத்துவிட்டு மனைவியை முறைத்துப் பார்க்கிறார்.

மேலும் கூட்டம் நிறைவடைந்து செல்கின்றபோது மனைவியின் கைகளைப் பிடிப்பதற்காக அவர் முயன்றபோதும் மனைவி அதனை தவிர்த்துவிடுகிறார்.

இவற்றின் அடிப்படையில் முகநூலில் பலர் பல்வேறுபட்ட கோணங்களில் கருத்துக்கள் தெரிவித்தபோதும் சிலரது கருத்துக்கள் சிலவற்றை இங்கு இணைக்கின்றோம்.

”இறுதியாக கேப்டன், மனைவியின் கையை பிடிக்க, அதை கண்டுகொள்ளாமல் வெளியேருகிறார். இது தான் கொடுமையிலும் கொடுமை.. கேப்டனை வைத்து ஒரு நாடகம்.”

”கேப்டன் பிரஸ்மீட்டுக்கு முன்னாடி எப்படி கூப்பிட்டு வந்து உட்கார வச்சாங்க. மீட்டிங் முடிஞ்ச பிறகு அம்போனு விட்டுட்டாங்க இதுதான் அவர்களின் அரசியல் ஆரம்பம் கேப்டனுக்கு நேர்ந்த கதிதான் தமிழக மக்களுக்கும்”

”அவர் பேசனுமுன்னு நினைக்கிறார். ஆனால் அவருக்கு பேச்சு வரவில்லையென்று அவர் சைகையிலேயே சொல்கிறார்.”

”முடியாத மனுசன கூட்டி வந்து சீட்டுக்காக ஒக்கார வச்சி வேல முடிஞ்சதும் விட்டு போரியே நீ பெரிய அரசியல் வாதி மா! பணம் பத்தும் செய்யும்!”

”கடைசியா மீட்டிங் முடிஞ்சு கேப்டன் பிரேமலதாவ கூப்பிடுறாரு அவ கண்டுக்காம போறா… ஒன்னும் புரியல… கேப்டன் மீண்டு(ம்) வரனும்…”

”இது விஜயகாந்த் அமைத்த கூட்டணி அல்ல….. விசமிகள் அமைத்த கூட்டணி…. பணத்தாசையில் அமைந்த கூட்டணி…..”

”ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னணியில் ஒருப் பெண் இருப்பாள், என்றுதான் கேள்வி பட்டுள்ளேன்.ஆனால் கேவலமான தோல்வி க்குப் பின்னணியிலும் பெண்தான். என்று பிரேம லதா விஜயகாந்த் அவர்கள் நமக்கு உணர்த்துகிறார்.என்னுடைய கணிப்பு ,எப்படியும் ஐநூறு கோடிக்குக் குறையாமல் வாங்கி யிருப்பார்கள் என்பது.”

”அவர் சினிமாவில் வெற்றி பெற்றபோதும் தற்போது உடல்நிலை சரியில்லாதபோதும் ஒரு நல்ல மனைவியாக போராடிக்கொண்டு இருக்கிறார் பிரேமலதா..”

”குழந்தை மனசுக்காரன் குழந்தையாகவே ஆகி விட்டார் நல்ல மனுஷன் மனைவியின் கையை பிடிக்க வரும் கணவனை கண்டும் காணாமல் இருக்கும் இருக்கும் மனைவி மிக வேதனை ஒன்னு மட்டும் தெரியுது யாருக்கும் தொல்லை இல்லாமல் யாரையும் எதிர் பார்க்காமல் உறங்கும் போதே இறந்து விடவேண்டும்.”

”என்ன நடக்கிறதென்றே தொியவில்லை கேப்டனுக்கு சிறு குழந்தையை போன்று கை தட்டுகிறாா். இதை பாா்த்து கண் கலங்கிவிட்டது. கேப்டனை வைத்து அக்காவும் தம்பியும் கல்லா கட்ட ஆரம்பித்து விட்டாா்கள். தயவு செய்து யாரும் கேப்டனை தரம் தாழ்ந்து விமா்சிக்க வேண்டாம்(இப்பொழுது) அவா் ஒரு குழந்தையை போன்று இருக்கிறாா்.”

”மூளை நரம்பு செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது அல்லது வலி நீக்க ஸ்டிராய்டு மாத்திரைகள் மூளை செயல்பாட்டை மந்தமாக்கியிருக்கலாம். இதனால் உடல் அசைவுகள் மந்தமாக இருக்கிறது. ஆனாலும் தன்னை தெளிவாக வைத்திருக்க ரொம்ப சிரமப்படுகிறார். சிறுநீரகத்தில் பிரச்சினை இருந்தால் தொண்டை மற்றும் குரல்வளையில் பாதிப்பு உண்டாகும். மேலும் நுரையீரலும் பலவீனமடைந்திருக்கும். அவர் மூச்சு வாங்குவதை கவனியுங்கள். சிறுநீரகத்தின் அட்ரீனல் சுரப்பி என்பது மூளைச் செயல்பாட்டுடன் தொடர்புடைய ஹைப்போதாலமஸ் பிட்யூட்டரி சுரப்பியுடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலானோரின் கருத்துப்படி அமைந்துள்ள கூட்டணி உடன்படிக்கையில் விஜயகாந்த் ஒரு கைப்பொம்மை போல் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது புலனாவதாக தமிழக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.