வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி பேர்வழிகள் சுற்றிவளைப்பில் கைது!

0

வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்களைக் கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடருமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை பகுதியில் இவ்வாறான மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திலிருந்து 13 கடவுச்சீட்டுக்கள், வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள், வர்ண புகைப்படங்கள், பணம் பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டுக்கள் உட்பட மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான பயணச்சீட்டுக்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற போர்வையில் மோசடி நடத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் வேலை பெற்றுத்தருவதாகக் கோரி ஒருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபா வீதம் அறவிடப்பட்டுள்ளது. நிறுவனத்தை நடத்திய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.