வேட்பாளரை அறிவிக்குமாறு மைத்திரி மஹிந்தவிடம் கோரிக்கை!

0

ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்திருந்தால், அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த தரப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்யா விஜயத்தை முடித்து நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதி இந்த தகவலைத் தனது சகா ஒருவர் ஊடாக மஹிந்த தரப்புக்கு அனுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் அதன் பின்னர் தீர்மானிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை மஹிந்த தரப்புக்கு அழுத்தத்தை வழங்கும் வகையில் திரைமறைவில் சில காய்களையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன், மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளைத் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ஷ , அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.