சிவஜெயந்தனிடமிருந்து தப்பியது கூட்டுறவு தலைவர் பதவி!

0

ஊழலை அம்பலப்படுத்தியதால் சுதாரித்துக்கொண்ட கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம் 

கடந்த வாரம் கரைதுறைப்பற்றில் இடம்பெற்ற பாரிய ஊழலை இனங்கண்டு எமது செய்திப்பிரிவு வெளிட்டது இதன்போது தற்போது கரைதுறைப்பற்றின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் என அகில இலங்கை திட்டமிடல் சேவைத்தரத்தால் அன்றி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரின் அதிகாரத்துக்கு உட்பட்டவகையில் நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உதவியாளரான சிவஜெயந்தன் என்பவரது ஊழல்களை சுட்டிக்காட்டி இருந்தோம்.

இதற்கு அமைய இவர் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பதவிக்கு உரிய தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டியிருந்தோம். இத்தோடு இவரது அரச தொழில் அதிகார துஸ்பிரையோகங்களையும் ஊழலையும் சுட்டிக்காட்டி இருந்தோம். இருந்தும் தேர்தலில் போட்டியிட்ட சிவஜெயந்தன் அவர்கள் தற்போது தான் உள்ள பதவியை ஆதாயமாக பயன்படுத்தி தனக்கு எதிராக போட்டியிட்ட விக்ரர் என்பவர் 46 வாக்குகளை மட்டும் பெற சிவஜெந்தன் 64 வாக்குகளை பெற்று முதன்மை வகித்தார்.

இந்த நிலையில் எமது செய்தியின்மூலம் பல உண்மைகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அதனை ஆராய்ந்த வடமாகண கூட்டுறவு ஆணையாளர் சிவஜெயந்தனுக்கு கடந்தகாலத்தின் கூட்டுறவுச்சங்கத்துடனான ஊழல் மோசடிகளில் தொடர்பிருப்பது இனங்காணப்பட்டதை தொடர்ந்து சிவஜெயந்தன் குறித்த தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என தடைவிதித்து பிறிதெருவரை தலைவராக நியமிக்கும்படி கூட்டுறவு ஆணையாளர் அறிவித்துள்ளார்.

குறித்த ஆணையாளர் போன்று மக்கள் நலன்பேனும் நோக்குடன் அரசியல்த்தலையீடுகளுக்கு அடிபணியாது மாவட்டத்தின் ஏனைய உயர் பதவிகளில் உள்ள அரச அதிகாரிகளும் பெறுப்புடன் செயற்படுவார்களாயின் மக்கள் பணம் இத்தகைய ஊழல்வாதிகளால் சூரையாடுவது தடுக்கப்படும். இது தொடர்பான மேலதிக விடையங்களை நீங்கள் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைமைக்காரியாலயத்தை அனுகுவதன்மூலம் அறியலாம்.

அமைச்சர் ரிசாத் பதியூதீனின் ஆதரவாளரான இவர், சில வன்முறை சம்பவங்களுடனும் தொடர்புடையவர்.

Leave A Reply

Your email address will not be published.