2 மாதங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்ற பெண் !

0

இரட்டை கருப்பைகள் மூலம் இரு மாதங்களில் அடுத்தடுத்து குழந்தைகள் பெற்ற பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி என்பவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் 25-ம் தேதி அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

அதன்பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22ஆம் திகதி அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வை்ததியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வைத்தியர்கள் கூறுகையில்,

மருத்துவ துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.