அமெரிக்க – வடகொரிய பேச்சுவார்த்தை தொடரவேண்டும் ! சீனா கோரிக்கை

0

அமெரிக்காவும் வடகொரியாவும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க வடகொரிய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியின் பின்னர், வடகொரியா வழிநடத்தல் ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளது. அந்நடவடிக்கை இடம்பெற்ற சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமென இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது அவசியம். ஏனெனில், வடக்கு ஆசிய நாடுகளின் நலனும் இதில் தங்கியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் வழிநடத்தல் ஆயுத சோதனையைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தின் எதிர்காலத்தை எவராலும் கணிக்க முடியாதென வடகொரிய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அந்நாட்டு செய்திச் சேவை இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடகொரியாவும் அமெரிக்காவும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரவேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.