இலங்கைக்கான புதிய பிரித்தானியத் தூதுவர் நியமனம்!

0

இலங்கைக்கான புதிய பிரித்தானியத் தூதுவராக சாரா ஹல்டன் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் அறிவித்துள்ளது.இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பில் பிரித்தானியத் தூதுவராகக் கடமையாற்றி வரும் ஜேம்ஸ் டௌரிஸ் மற்றொரு இராஜதந்திர சேவைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையிலேயே புதிய தூதுவராக சாரா ஹல்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில் மனித வளப் பணியகத்தில் பிரதிப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் சாரா ஹல்டன் முன்னதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின் கொரிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவராகவும், சிம்பாவேயிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.