இலங்கைக்கு கடல் கண்காணிப்பு விமானத்தை வழங்கும் இந்தியா!

0

இலங்கைக்கு டோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானமொன்றை இந்தியா வழங்கவுள்ளதாகத் தெரிய வருகிறது.

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே டோனியர் விமானமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

பிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நிலையிலேயே இந்தியக் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள டோனியர் விமானமொன்றை இலங்கை கடற்படைக்கு வழங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளதாகப் புதுடெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.