இலங்கையில் அனல்காற்று வீசப்போகும் பகுதிகள் இவைதான்! மக்களே அவதானம்!

0

நாட்டின் சில பகுதிகளில் அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே இன்று(செவ்வாய்கிழமை) அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை கடும் வெப்பமான காலநிலை நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோர்வு, களைப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பொது மக்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.