இலங்கை வரலாற்றில் ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்டவன் நான் மட்டுமே ! மைத்திரி

0

இலங்கையின் ஜனாதிபதிகளில் ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட ஜனாதிபதி தானே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தனக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதி, தன்னைப் போன்று, சேறு பூசல்களைப் பொறுத்துக்கொள்பவராக இருக்கமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தன்னை நடத்தியதைப் போன்று, அடுத்த ஜனாதிபதியையும் நடத்தும் எண்ணம் கொண்டிருந்தால், கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஊடகங்களை அவர் எச்சரித்தார்.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தன்னை இலக்கு வைத்து தாக்கியதாகவும் அவர்களுக்கு தான் எளிதான இலக்காக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

டி.பி.விஜேதுங்கவைத் தவிர வேறெந்த ஜனாதிபதிக்கும் ஊடகங்களுடன் நல்லுறவு இருந்ததில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அடுத்த ஜனாதிபதி பதவிக்குப் பலரது பெயர்கள் முன்மொழியப்படுகின்றன. இவர்களில் யார் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தாலும், ஊடகங்களுடக்கு அது கடுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.