இலங்கை விவசாயிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி !

0

ஐம்பது வீத மானியத்தில் சூரியகலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திர தொகுதி விவசாயிகளிற்கு வழங்கவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “சூரிய கலத்தில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயிகளின் நலன் கருதி வழங்கவுள்ளோம்.

3 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த சூரிய கலத்துடன் கூடிய நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயிகளுக்கு ஐம்பது வீத மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

மேலும் விவசாயிகள் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயக் காணி, வீடு இருப்பதோடு மின்சாரப் பட்டியல் என்பன இருந்தாலே போதுமானதாகும்.

இதனை பெறவிரும்புபவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கமநல சேவை திணைக்களங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்வதோடு இது தொடர்பான மேலதிக விபரங்களை கமநல சேவை திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.