இவ்வருடம் அதிக நெல் அறுவடை! பிரதமர் ரணில் அறிவிப்பு!

0

வரலாற்றில் அதிகமான நெல் அறுவடை இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இதனை விடவும் நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு விவசாயத் துறையை நவீன மயப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) அனுராதபுரத்தில் நடைபெற்ற புத்தாண்டு அரிசிப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இம்முறை நெல் அறுவடையை 30 லட்சம் மெட்ரிக் டொன்னாக அதிகரிக்க முடிந்துள்ளதாகவும், இதனால், விவசாயத்தினுாடாக அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.