இம்முறை உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 18ம் திகதிக்குள் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
நேற்று நிறைவடைந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் சுற்றுத்தொடரில் வெளிப்படுத்தப்பட்ட திறமைகள் மற்றும் அனுபவத்தை கருத்திற்கொண்டு இம்முறை உலகக்கிண்ணத்துக்கான அணி தெரிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அணி விபரம் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அணித்தலைவர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் அணிக்கான தலைவர் பதவிக்காக பல வீரர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.