உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை சிரேஷ்ட வீரர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்!

0

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோர் இழந்துள்ளனர்.

உபாதை காரணமாக குறித்த இருவரும் போட்டித்தொடரிலிருந்து விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக ஆகியோருக்கு எதிர்வரும் உலகக்கிண்ண போட்டித்தொடரில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடர் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த தொடரில் பிரகாசிக்கும் வீரர்களுக்கே உலக்ககின்ன இலங்கை அணியில் வாய்யப்பு வழங்கப்படவுள்ளது.

நான்கு அணிகள் கலந்துகொள்ளவுள்ள குறித்த போட்டித்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

குறித்த போட்டித்தொடரில் கண்டி அணிக்கு திமுத் கருணாரத்ன, கொழும்பு அணிக்கு தினேஷ் சந்திமால், காலி அணிக்கு லசித் மாலிங்க, தம்புள்ளை அணிக்கு அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.