தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நல்ல விஷயங்களாக நடந்து வருகிறது. முதல் மாத படங்களே செம ஹிட், அதோடு பிரபலங்களின் திருமணங்களும் நடந்து வருகிறது.
அப்படி படு பிரம்மாண்டமாக நடந்தது ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் மறுமணம். விசாகன் என்ற தொழிலதிபரை தான் அவர் மறுமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தங்களது புதிய வாழ்க்கை குறித்து இருவரும் பேட்டி கொடுத்துள்ளனர்.
அதில் சௌந்தர்யா பேசும்போது, விசாகனுக்கு மகன் வேத் ரொம்ப பிடித்துவிட்டது, இருவரும் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டனர்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தாலி கட்டும் நேரத்தில் வேத் இல்லை, அவன் வரும் காத்திருக்கலாம் என விசாகன் கூறி அவன் வரும் வரை தாலி கட்டாமல் காத்திருந்தார் என்று கூறியுள்ளார்.