டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் வாகனங்களை வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனமொன்றை கஞ்ஜிபான இம்ரான் கொண்டு நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் ரிஸ்பான் என்பவர் நடாத்திச் சென்றுள்ளார். இவர் கொலை செய்யப்படவே இந்நிறுவனம் கஞ்ஜிபான இம்ரானின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிறுவனம் முழுமையாக மாகந்துரே மதூஸிற்குரியது எனவும் இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.