வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண்ணொருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ – எகொடவத்தை வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இன்று மாலை குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
