சரத்பொன்சேகாவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி!

0

முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களின் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காகவே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. உள்துறை அமைச்சே பிரஜாவுரிமை குறித்த விபரங்களிற்கு பொறுப்புபாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.