பொலிவுட்டின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சல்மான்கான் மற்றும் அலீயா பட் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அலீயா ஜோடியாக நடிப்பதை முன்னிட்டு அவருக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த விமர்சனங்களில், “53 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு 26 வயதாகும் அலீயா பட் ஜோடியா? அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். இயக்குநர் பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார்?” என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து நடிகை அலீயா பட் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகின்றார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.
எமக்கு பல நல்ல திரைப்படங்களை அளித்தவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவரின் கதை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
