சீனாவின் வடமேற்கு பிராந்தியத்தின் பல பாகங்களில் வசந்த கால பனிப் பொழிவின் அழகிய தோற்றங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.
நேற்றும் இன்றும் அங்கு சஞ்சரித்தவர்களின் காணொளிப்பையே இங்கு காண்கின்றீர்கள். அங்கு மாத்திரமன்றி சீனாவின் வேறு பல பாகங்களிலும் இந்த இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பிஜிங்கிற்கு சற்று தொலைவில் உள்ள புறநகர் பகுதியான மென்டோகோ மாவட்டத்தில் பனி போர்த்திய மலைப் பகுதியான மியாவோபெங் பகுதி இயற்கை காட்சிகளையும் சுற்றுலாப் பயணிகளை வியப்படைய வைக்கும் அற்புத பிரதேசமாக உள்ளது.
இந்த வசந்தகாலம் பூத்துக் குலுக்கும் மலர்ச் சோலைகளுடன் உதயமாகியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை மேலும் அந்த பகுதிகளுக்கு ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை நேரம் 6 மணிக்கெல்லாம் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிக்கு வந்து இயற்கை காட்சிகளை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபடவுதாக அந்த பகுதிக்கு பொறுப்பான அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, வடக்கு சீனாவின் ஹெபெய் மாகாணத்தின் ஷான்ஷியாகு நகரில் வெப்பநிலை பூஜ்ஜியம் பாகைக்கு குறைந்துள்ளதுடன், இன்று அதற்கும் கீழ் குளிர்காலநிலை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக ஷான்ஷியாகுவை கடந்து செல்லும் அனைத்து அதிவேக பாதைகளும் மூடப்பட்டுள்ளன. இதுதவிர., தன்னாட்சி பிரதேசமான ஷின்ஜியாங் உய்கர் பிராந்தியத்திலும் வெப்பநிலை வீழ்ச்சியடைந்து மறை 8 பாகையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் அந்த பிராந்தியம் பனியினால் மூடப்பட்டுள்ளது. எனினும், இந்த பனிப் பொழிவு தற்போதைய ஏர் உழும் பணிகளுக்கு சாதகமானதாக அமைந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.