தனிச்சிறப்பை பெற்றது சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்

0

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் தற்போது நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரெயில் நிலையமாக அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ’வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ என்ற ரெயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது.

ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரெயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை தற்போது ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் தட்டிப்பறித்து விட்டது, குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.