தமிழகத்திலிருந்து இலங்கைக்கு திரும்பவுள்ள அகதிகள் ! அரசாங்கம் அறிவிப்பு

0

தமிழ் நாட்டிலிருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார, மறுசீரமைப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அதன்படி 23 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் யாழ்ப்பாணம். மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

நாடு திரும்புபவர்களுக்கு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக தலா 5 ஆயிரம் ரூபாய் உடனடி நிதியாகவும், பின்னர் 25 ஆயிரம் ரூபாய் தற்காலிக கூடாரம் அமைக்கும் உதவி நிதியாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்கொள்வனவு மற்றும் காணி சுத்திகரிப்பு ஆகியவற்றுக்காக மேலதிகமாக 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.