தரம் 5 புலமைப்பரிட்சைக்கு பதில் தரம் 8 இல் புதிய பரீட்சை!

0

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக எட்டாம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்தி தமது திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத் துறையின் மூலம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கற்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கின்றது. இதற்காக வேண்டி பாடசாலைகளை வகைப்படுத்தி, அப்பாடசாலைகளுக்கான விசேட பாடத் துறைகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடவத்த மகா மாய மகளிர் கல்லூரியில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.