தி.மு.க. 33 தொகுதிகளைக் கைப்பற்றும் ! கருத்துக் கணிப்பில் தகவல்

0

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 27-33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பண்பாடு மக்கள் தொடர்பகம்’ தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில், எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரை 40 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், லயோலா கல்லூரி முன்னாள் மாணவருமான சி.திருநாவுக்கரசு வழிகாட்டுதலின் பேரில் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயற்பாடுகள், நலத்திட்டங்களில் தமிழக அரசின் மீது மக்களின் மதிப்பீடு குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு தாக்குப் பிடிக்கக் காரணம் என்ன என்ற கேள்விக்கு பா.ஜ.க.வின் தலையீடு என 50% மக்களும், முதல்வரின் ஆளுமை காரணம் என 38% பேரும் தெரிவித்துள்ளனர்.

2019இல் யார் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு 35.75% பேர் ராகுல் காந்தி, 27.9% பேர் மோடி, 7.1% பேர் மன்மோகன் சிங், 4.4% பேர் பிரியங்கா காந்தி, 4.22% பேர் மம்தா பானர்ஜிக்கும் வாக்களித்துள்ளனர்.

ஜி.எஸ்.டி., சரிந்து வரும் வேலைவாய்ப்புகள், சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்டவை பா.ஜ.க. அரசின் மீதான அதிருப்திக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது எனவும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணி 1-2 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர், , காஞ்சிபுரம், அரக்கோணம், மத்திய சென்னை, தென் சென்னை, தருமபுரி, வட சென்னை,திருவண்ணாமலை, ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, ஆரணி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி (தனி), புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், சிதம்பரம் (தனி), பெரம்பலூர்

அ.தி.மு.க:

வேலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை

அ.ம.மு.க:

தேனி, திருச்சி

கணிக்க முடியாதது:

திருப்பூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.