துறைமுக நகரில் 80 ஆயிரம் வேலைவாய்ப்புகள்!

0

கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக்கத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம் பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறைமுக நகரரை நிர்வகிக்க கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு அமைக்கப்படும். அதற்கான சட்ட மூலங்கள் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அதேவேளை, 269 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டுள்ள துறைமுக நகரப் பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான தனியானதொரு தேர்தல் தொகுதியும் அமைக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.