தூத்துக்குடியில் வியாபாரிகளுடன் மீன் விற்ற தமிழிசை…

0

தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் வாக்கு சேகரிக்கும்போது மீன் வியாபாரிகளுடன் மீன் விற்பனை செய்தார்.

அ.தி.மு.க.  கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சார்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

இதில் கனிமொழியை பற்றி வெளியே தெரிகிறதோ இல்லையோ தமிழிசை டிரெண்டாகி விடுகிறார். அவர் விதவிதமான வழிகளில் வாக்கு சேகரித்து வருகிறார். 

அந்த வகையில், அவர் புன்னைக்காயல் பகுதியில் மீன் சந்தைக்கு வாக்கு சேகரிக்க சென்றார். 

அப்போது அங்கு மீன் விற்றுக்கொண்டிருந்த மீனவ பெண்கள் தமிழிசையை கட்டிப்பிடித்து வரவேற்றனர். தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுடன் சேர்ந்து மீன்களை விற்பது போன்று ஆனந்தமாக கூடி மகிழ்ந்தார். இந்த காட்சிகள் இப்போது டிரென்ட்டாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.