தேரரை கடுமையாக திட்டிய லக்‌ஷ்மன் கிரியெல்ல

0

கம்பளை- நாவலப்பிட்டி, உலப்பனை வீதியின் மரியாவத்தை சந்தியிலிருந்தான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இன்று சில மணித்தியாலங்களாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட அதிகளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, வீதி புனரமைக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் அறிந்துகொள்ள அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேரர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

தொலைபேசி உரையாடலின் போது அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல வழங்கிய பதிலால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

குறித்த வீதிக்கு தாம் ஏற்கனவே 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கியதாகவும் ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்க எவரும் இருக்காததால், அதனை செய்ய முடியாமற்போனதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது தன்னுடன் தொலைபேசியில் உரையாற்றிய நபர் தேரர் என தனக்குத் தெரியாததால், அவர் தன்னைத் திட்டிய போது தானும் திட்டியதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

தான் பணத்தை வீதி புனரமைப்பிற்கு ஒதுக்கியுள்ள நிலையில், தேரர் தன்னைத் திட்டியமை தவறான விடயம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.