பதவி விலகினார் சூடான் ஜனாதிபதி ! வெற்றிக்களிப்பில் போராட்டக்காரர்கள்

0

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் பதவி விலகுவதாக அறிவித்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களும் இராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் இன்று (வியாழக்கிழமை) பதவி விலகியுள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு கார்ட்டூம் மாகாணத்தில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த நகர்வு குறித்து இராணுவம் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில் இராணுவ தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காத்திருக்கின்றனர்.

இதேவேளை சற்று முன்னர் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.