நடிகர் விஜயகாந்த் என்றால் இன்றும் அனைவரிடமும் நன் மதிப்பை பெற்றவர். சினிமாத்துறை மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் அவரின் மீது அன்பும், மரியாதையும் இருக்கிறது.
படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் தீவிரமாக அரசியலில் இறங்கினார். ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்து பின் பிரிந்து வந்தார். தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்க கூடியவர் என்ற பெருமை அவருக்கு இருந்தது.
ஆனால் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவால் அவர் அமெரிக்கா நாட்டின் சிகிச்சை எடுத்து வந்தார். அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தான் அவரை பார்க்க முடிந்தது.
நாளை மறுநாள் தேர்தல் என்பதால் அவர் தன் கட்சி, கூட்டணி சார்பாக போட்டியிடும் அனைவரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் நேரில் கலந்து கொண்டது மக்களுக்கு அதிர்ச்சி கலந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

