பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு ! 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

0

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவேட்டா நகரிலுள்ள பழச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குண்டுவெடிப்பினால், அருகிலுள்ள கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

குறித்த குண்டுத்தாக்குதல் ஹஸரா என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதென பிரதி பொலிஸ் பணிப்பாளர் அப்துல் ரஸாக்கை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பலோசிஸ்தான் முதலமைச்சர் ஜமல் கமால் ஆகியோர் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.