பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் திட்டம் கசிந்தது!

0

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ள தகவல்கள் கசிந்துள்ளதையடுத்து, பாகிஸ்தானில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஸா மஃமூத் குரேஸ் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தாக்குதல் திட்டம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமது நாட்டின் மீது இந்தியா மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தாக்குதல் நடவடிக்கை குறித்து நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த தாக்குதலை எதிர்வரும் 16 ஆம் 20 ஆம் திகதிகளில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளதாகவும் மஃமூத் குரேஸ் கூறியுள்ளார்.

காஸ்மீர் புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அன்று முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.