பாலியல் கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை.. அதிமுகவிற்கு வாக்களியுங்கள்! பிரேமலதா பரபரப்பு!

0

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணி ஒரு மெகா கூட்டணி. பொங்கலுக்கு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் இப்போது வழங்கப் பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியாக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற உள்ளது.

பெண்களின், தாய்க்குலங்களின் வாழ்க்கையை காக்கக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணிதான். நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. இந்தக் கூட்டணிக்கு  நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.