பா.ஜ.க.வுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும்… கனிமொழி காட்டம்…

0

பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் சொல்லித்தர வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கூறினார்.

தமிழக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தைலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும்  கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், போர் விமானங்களில் கூட ஊழல் செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க. ஆட்சி. நமது நாட்டின் பாதுகாப்புக்கு வாங்க கூடிய விமானங்களில் கூட ஊழல் செய்து இந்த நாட்டையே ஆபத்துக்கு உள்ளாக்கக்கூடிய ஆட்சியை நடத்துகிறார் மோடி.

பிரதமர் மோடியே வீட்டுக்கு அனுப்ப கூடிய தேர்தல். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை.  தமிழகத்தில் தாமரை மலராது. அவர்களுக்க தக்க பாடம் சொல்லித்தர வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.