பிரிட்டனிலுள்ள பீட்ஸா உணகமொன்றில் பலர் முன்னிலையில் தனது காதலனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண்ணொருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த டேனியெலா ஹேர்ஸ்ட் (30), எனும் பெண்ணும் அவரின் காதலர் கிறேக் ஸ்மித்தும் (31) 2007 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் பீட்ஸா வாங்குவதற்காக காத்திருந்தபோது, பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்டனர்.
இதன்போது பதிவாகிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் இவ்விருவரும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினர்.
எனினும், 12 மாதங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும். 23 வார காலங்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் முதலான நிபந்தனைகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டன.
எனினும், சில மாதங்களுக்குமுன் ஸ்கார்பரோ நகரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் டேனியெலா ஹேர்ஸ்ட்டுக்கு 16 மாத சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் தீர்;ப்பளித்தது. இதனால், தற்போது அப்பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.