புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும்

0

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான கபில குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தினங்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மது வரி திணைக்கள ஆணையாளர் எச்.ஜி.சுமனசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.