பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு முகங்கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருமான, தொழிலாளர் கட்சித் தலைவருமான நாஸ் ஷா ஏப்ரல் 1-ம் திகதி பேருந்தில் சென்றுள்ளார்.
இதன்போது அவரைப் பார்த்து ரசித்தபடி மர்மநபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ் ஷா உடனடியாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
எனினும் அதற்குள் குறித்த நபர் பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து மத்திய லண்டனிலுள்ள ஒயிட் ஹால் பொலிஸாரிடம் நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
