போக்குவரத்துக் குற்றங்களுக்கு குறைந்த தண்டப் பணமாக 25 ஆயிரம் ரூபா சட்டம் அமுல்

0

போக்குவரத்துச் சட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக அறவிடப்படும் 07 குற்றச் செயல்களுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்கும் விசேட சட்டம் அமுல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்து ஏழு குற்றச் செயல்களுக்கான குறைந்த பட்ச தண்டப்பணத்தை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன ஒழுங்குகளை மீறுதல் மற்றும் தண்டப் பணம் அறிவிடுதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த தண்டப் பண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நிதி அமைச்சு, சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், அனுமதிப்பத்திரம் அற்ற ஒருவரை சாரதியாக நியமித்தல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல், அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துதல், இடது பக்கத்தால் முந்திச் செல்லுதல் உள்ளிட்ட தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.