மஹியங்கனை – பதுளை வீதியில் மஹியங்கனை மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த 10 பேரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தியத்தலாவயிலிருந்து திருகோணமலை வரை பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் வேன் மோதியுள்ளது. விபத்து இடம்பெறும் போது வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வேனில் எஞ்சிய இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் விபத்துக்குக் காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.