மின்துண்டிப்புக்கு அரசின் முட்டாள்தனமே காரணம்! ஜேவிபி கடும் குற்றச்சாட்டு!

0

மின்சார துண்டிப்புக்கான காரணம் நீர்மட்ட வீழ்ச்சி அல்ல என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திடம் மின்சார விநியோகம் தொடர்பான முறையான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணம் என இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

தற்போது மின்சார துண்டிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிறு வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலைமைக்கு நீர்நிலைகளில் போதிய நீர் இன்மையே காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை.

காலத்துக்கு ஏற்ப மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கான திட்டமிடல் எதுவும் இல்லாமையே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.