சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சிவாவிற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். ஏற்கெனவே இருவரும் வேலைக்காரன் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வரும் மே மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி பட்டய கிளப்பி வரும் நிலையில் தற்போது இதன் இரண்டாவது சிங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது சிங்கிளான கலக்கு மிஸ்டர் லோக்கலு பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.