மே மாத இறுதி வரை மழை இல்லை ! வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

0

மேமாத இறுதி வரை குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும்,அடுத்த சில தினங்களுக்கு இடையிடையே ஓரளவு மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை,நாட்டில் நிலவும் வறட்சியினால் 19 மாவட்டங்களை சேர்ந்த 5,48,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பெரும்பாலான மக்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.